புகாரைத் தொடர்ந்து கவனித்தல்ஒழுக்கக்கோட்பாடு மற்றும் வணிக நெறிமுறைஅடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

புகாரை உருவாக்குதல்

உங்கள் புகாரை முடித்தபின், "புகார் விசை" என்ற தனிப்பட்ட குறியீடு உங்களுக்கு கொடுக்கப்படும். உங்கள் புகார் விசையையும், கடவுச்சொல்லையும் எழுதி வைத்துக்கொள்ளவும், மேலும் அவற்றைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். 5-6 வணிக நாட்களுக்குப் பிறகு, கருத்து அல்லது கேள்விகளுக்காக உங்கள் புகாரினைப் பார்க்க, உங்களின் புகார் விசை மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தவும்.

நமது கடமை

Joyson Safety Systems என்பது பொறுப்பு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றின் பண்புகளை நிலையாகக் கொண்டுள்ள ஓர் அமைப்பாகும். எங்களின் ஒழுக்கக்கோட்பாடு மற்றும் வணிக நெறிமுறையில் உயர் தரநிலை நெறிமுறையுடன் வணிகத்தை நடத்துவதற்கான பொதுவான வழிகாட்டுதல்கள் உள்ளது.

கருத்துகள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தெரிவிக்கப்படுவதைத் தடைசெய்யாமல், அவற்றை வரவேற்கும் விதத்திலான பணிச்சூழலை வழங்க Joyson Safety Systems கடமைப்பட்டுள்ளது. கொள்கை, தரநிலை மற்றும் சட்ட மீறல்கள் நிகழ்ந்துள்ளன என நீங்கள் நினைக்கும் சூழல்களில் உங்களின் மேற்பார்வையாளர் அல்லது நிர்வாகத்தை அணுகுவதில் சௌகரியமாக உணர வேண்டுமென விரும்புகிறோம்.

நம்பிக்கையுடன் பெயரற்ற முறையில் புகாரளிப்பதற்கு முடிவுசெய்தால், மூன்றாம் தரப்பு ஹாட்லைன் வழங்குநரான EthicsPoint வழங்கும் இந்த ஹாட்லைனைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கிறோம். எங்களின் ஒழுக்கக்கோட்பாடு மற்றும் வணிக நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மீறல்கள் மற்றும் நிறுவனக் கொள்கை, தரநிலைகள் அல்லது சட்ட மீறல்கள் தொடர்பான பிற கவலைகள் குறித்து புகாரளிக்க உங்களை ஊக்குவிக்கிறோம். அவ்வாறு தேர்வுசெய்ய வேண்டுமெனில், நீங்கள் வழங்கும் தகவல்கள் முற்றிலும் ரகசியமானதாகவும் பெயரற்ற முறையிலும் EthicsPoint மூலம் எங்களுக்கு அனுப்பப்படும். உங்கள் கருத்துகள் விசாரிக்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்குகிறோம்.

மேலும் விவரங்களுக்கு, EthicsPoint இல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவைப் பார்க்கவும்.